தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ஸ்கூல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு டூர் கிளம்ப, பாண்டியம்மா ஒரு திட்டத்தை தீட்டிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ரத்னாவை எப்படியாவது திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வர வைக்க வேண்டும் என யோசிக்க, சௌந்தரபாண்டி டீயில் ஒரு வித மயக்க மருந்தை கலந்து பாக்கியத்திற்கு கொடுத்து விட்டால், கொஞ்ச நேரத்தில் அவள் மயங்க, இந்த விஷயம் அறிந்து ரத்னா உடனே ஓடி வந்து விடுவாள் என கணக்கு போடுகின்றனர்.
உடனே டீயில் மயக்க மருந்தை கலந்து எல்லாருக்கும் டீ கொடுத்து வரும் சிவபாலனை கூப்பிட்டு “உங்க அம்மாவுக்கு சுகர் இருக்கிறதால இது சக்கரை கம்மியா போட்ட டீயை கொடுத்து விடு” என்று கொடுத்து அனுப்ப, எதிர்பாராத ட்விஸ்ட்டாக கனி அந்த டீ-யை குடித்து விடுகிறாள்.
இதனால் கொஞ்ச நேரத்தில் அவள் துடிதுடிக்க, அந்த விஷயம் ரத்னாவிற்கும் தெரியப்படுத்தப்படுகிறது. சௌந்தரபாண்டி டீயை யார் குடிச்சா என்ன இருக்கு? அந்த ரத்னா திரும்பவும் கல்யாண மண்டபத்திற்கு வந்தால் போதும் என சொல்கின்றனர். பரணி கனிக்கு சிகிச்சை கொடுத்து அவளை நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Sarpatta 2: நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!
Anuya: “பெண்கள் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்யாதீங்க, நான் உயிருடன் இருக்க காரணம் என் குடும்பம்” – அனுயா வேதனை!