7 Am Headlines today 2024 april 5th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு 
தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி – ஏப்ரல் 12ல் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்பு 
இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் இதுவரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் 
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க 10 தனிப்படைகள், 3 ராட்சத கூண்டுகள் அமைப்பு 
அங்கீகாரம் பெறாத கட்சியாக இருப்பதால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து 
கோடை காலத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் அறிவிப்பு 
தமிழ்நாட்டில் 8,500 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தகவல் 
மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் பொருளாதாரம் உயரும் என பாஜக மாநில அண்ணாமலை பேச்சு 
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை 
மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 
பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் கட்டாயம் – புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு 
மக்களவை தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது

இந்தியா:

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் என பிரதமர் மோடி பேச்சு 
அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தியின் ராபர்ட் வதேரா விருப்பம் 
சிந்தித்து புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் 
தாக்குதல் திட்டங்களுடன் இந்தியாவுக்குள் நேபாள எல்லைக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது
பாஜகவை விட விஷமுள்ள பாம்பை நம்பலாம் என  மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் விமர்சனம் 
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சோனியா காந்தி – அரசியல் தலைவர்கள் வாழ்த்து 
பிரதமர் அல்லது குடியரசுத்தலைவர் பதவி வர முன்வந்தாலும் ஒருபோதும் பாஜகவில் இணைய மாட்டேன் – சித்தராமையா விமர்சனம் 

உலகம்: 

வெனிசுலா நாட்டின் உலகின் மிக வயதான ஜூவான் தனது 114 வயதில் காலமானார்
இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம் 
தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி 
இஸ்ரேலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை 

விளையாட்டு: 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல் 
ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
உபர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய அணி வீராங்கனை பி.வி.சிந்து விலகல் 
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 6வது இடத்துக்கு முன்னேறியது சென்னை 

Published at : 05 Apr 2024 07:29 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link