தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மற்றும் ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.
‘இனிமேல்’ என இந்த ஆல்பம் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், “லோகேஷ் கனகராஜ் அறிமுகம்” என இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடல் வரிகள் கமல்ஹாசன் என்றும், கம்போஸர் மற்றும் கான்சப்ட் வடிவமைப்பு ஸ்ருதி ஹாசன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் உங்களுடைய எலா டெலுலுவும் உண்மையாகும் எனும் கேப்ஷனும் பகிரப்பட்டுள்ளது.
#Inimel all your Delulus become Trulus#Ulaganayagan #KamalHaasan#InimelIdhuvey@ikamalhaasan #Mahendran @Dir_Lokesh @shrutihaasan @RKFI @turmericmediaTM@IamDwarkesh @bhuvangowda84 @philoedit #SriramIyengar @SowndarNallasa1 @gopiprasannaa @Pallavi_offl @iGeneDIandVFX… pic.twitter.com/awY7qzQpHF
— Raaj Kamal Films International (@RKFI) March 14, 2024
லோகேஷுக்கு கமல் ஹாசன் வரிகள் எழுதுவது குறித்த இந்த அப்டேட் வெளியாகி தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
மேலும் காண