விழுப்புரம்: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததையடுத்து நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி என கூறி ஆப்பிளை வழங்கினார். 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கூட்டணி வைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காண்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்து போட்டியிடுவதால் பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டு களம் காணுகிறார்.
இந்நிலையில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நமச்சிவாயம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ராமதாசை மரியாதை நிமித்தமாக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது பாஜக வேட்பாளர்  நமச்சிவாயம் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என கூறி சிறுவனிடம் ஆப்பிளை கொடுத்து  வேட்பாளர் நமச்சிவாயத்திடம் கொடுத்தார். அதன் பின்னர் புதுச்சேரி மாநிலத்தில் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை புரியுமாறு பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேட்டுக்கொண்டார்.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports