vijays the goat movie second single to release on june month says director venkat prabhu


தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட் (The GOAT). பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கல். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தி கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. தி கோட் படத்தின் முதல் பாடலை மிக ஆவலாக எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், விசில் போடு பாடலைக் கேட்டபிறகு கலவையான விமர்சனங்களைத் தெரிவித்தார்கள். வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்துக்கு கொடுத்ததைப் போல் மாஸான ஒரு பாடலை யுவன் விஜய்க்கு கொடுத்திருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தப் பாடல் ரசிகர்களின் எதிர்பாப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருந்ததா என்பது கேள்வியே! 
தி கோட் செகண்ட் சிங்கிள்

June
— venkat prabhu (@vp_offl) April 27, 2024

இப்படியான நிலையில், தி கோட் படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர் தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என பதிலளித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இந்த முறை யுவன் ஷங்கர் ராஜா விஜய் ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் காண

Source link