இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாகிஸ்தானிய பாடகர் அதிஃப் அஸ்லம் (Atif Aslam).
பாகிஸ்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் சுயாதீன இசை, பாலிவுட் சினிமா பாடல்கள், பஞ்சாப் மொழி பாடல்கள், ஆல்பம் பாடல்கள் என லைம்லைட்டியே தொடர்ந்து இருந்து வருகிறார். பாடல்கள் தவிர்த்து திரைப்படங்கள், நாடகங்களிலும் நடித்துள்ள அதிஃப் அஸ்லம், இந்தியா, பாகிஸ்தான் தாண்டி ஹாலிவுட்டிலும் தடம்படித்து தன் தனித்துவமான குரலுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சாரா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், முதன்முறையாக தன் மகளின் புகைப்படத்தை தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், மகள் பற்றிய நெகிழ்ச்சி தகவல் ஒன்றையும் பகிர்ந்து தன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார்.
தன் மகளின் முதல் பிறந்தநாளை நேற்று உற்சாகமாகக் கொண்டாடியுள்ள அதிஃப் அஸ்லம், தன் செல்ல மகளின் ஷூ தனக்கு அதிர்ஷ்டம் தருவதாகவும், அதனால் தன் மகளின் ஷூவை எப்போதும் தன் பாக்கெட்டிலேயே வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிஃப் அஸ்லாம் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சித் தகவல் அவரது ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து, அவரது பதிவு இன்ஸ்டாவில் இதயங்களை அள்ளி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகர் ரன்பீர் கபூர்- நடிகை அலியா பட் தம்பதி தங்கள் மகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்து புகைப்படங்களைப் பகிர்ந்தனர். இந்நிலையில் ரன்பீரின் குழந்தைக்கும் அதிஃப் அஸ்லமின் குழந்தைக்கும் அசாத்தியமான உருவ ஒற்றுமை இருப்பது குறித்தும் ரசிகர்கள் இணையத்தில் ஆச்சர்யமாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் காண