veera serial today april 26th zee tamil serial today episode written update


Veera Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வள்ளி ஏற்பாடு செய்த நபர் “பொண்ணு வீட்டில் இருந்து கொண்டு வந்த சீர் வரிசையை எல்லாம் எடுத்து வந்து வையுங்க” என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது, ராமசந்திரன் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று சொல்ல, “நான் ஒன்னும் இல்லாததை சொல்லலையே” என்று சொல்ல, வீரா “எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று சீர் வரிசையைக் கொண்டு வந்து வைக்க அதை பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுகின்றனர். 
“சின்ன இடம்னு சொன்னீங்க, ஆனால் நம்ம குடும்பத்துக்கு இணையா வரிசை வச்சிருக்காங்க” என்று பெருமையாகப் பேச வள்ளி கடுப்பாகிறாள். அடுத்து அப்படியே “நகையைக் கொண்டாந்து வைங்க, உரசி பாத்துடலாம்” என்று சொல்ல ராமசந்திரன் எதையும் உரசி பார்க்க வேண்டாம் என்று கோபப்படுகிறார். 
உடனே வள்ளி “அதானே அண்ணா முறை, இதுல என்ன இருக்கு” என்று சொல்ல வீரா “மடியில் கணம் இருந்தால் தான் பயப்படணும்” என்று சொல்லி நகைகளை கொண்டு வந்து வைக்க அதில் ஒரு கவரிங் நகையை வைத்திருப்பதால் வீராவின் அம்மா பதற்றம் அடைகிறார். பிறகு நடந்த விஷயத்தை வீராவிடம் சொல்ல “என்னமா இந்த நேரத்தில் இப்படி சொல்ற?” என்று அதிர்ச்சி அடைகிறாள். 
மேலும் ராமச்சந்திரனிடம் விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுத்து செல்ல, வள்ளி வந்து விட சொல்ல முடியாமல் பொய் விடுகிறது. ஒவ்வொரு நகையாக எடுத்து உரசி பார்த்து தங்கமா இல்லையா? என்று சோதனை செய்து வரும் நிலையில் கடைசியாக கவரிங் நகையை எடுக்க வீராவும் அவளது அம்மாவும் உச்சக்கட்ட பதற்றம் அடைகின்றனர். இப்படியான நிலையில் வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

மேலும் காண

Source link