விழுப்புரம் இளைஞரின் பசுமை புரட்சி… 555 ஏக்கர் பரப்பளவு ஏரியை சுற்றி மருத்துவ குணங்கள் உள்ள மரங்கள்…!

விவசாய பணி போல எரியை சுற்றி மரங்கள் நடும் இளைஞர்

விழுப்புரம் அருகே நீர்நிலைகளை காக்கும் வகையில் தனி ஒருவராக கடந்த ஐந்து ஆண்டுகளில் 1500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வரும் விவசாயி இளைஞர் செயல் போதுமக்க்ளிடேயை வரவேற்ப்பை பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ராஜா என்கின்ற சசிராஜா (40),  இவர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விவசாயம் செய்து வருகிறார். தனது கிராமமான பானாம்பட்டு எரியில் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் ஏரி வரண்டு பசுமை இழந்து காணபட்டுள்ளது. இதனை கண்ட சசிராஜா எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது விவசாய பணி போலவே எரியை சுற்றி மரங்கள் நடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.

பானாம்பட்டு கிராமத்தில் உள்ள 555 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி முழுவதும் ஏரியை சுற்றி வேப்பமரம், இலுப்பை மரம், ஆலமரம், பூவரச மரம், மாமரம் கொய்யா மரம், புங்க மரம், மருத்துவ குணங்கள் உள்ள மரங்கள் உள்ளிட்ட எண்ணற்ற மரங்களை கடந்த 2018 ஆண்டு முதல் நட ஆரம்பித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணியில் தனி நபராக சசிராஜா நடவு செய்து, அதனை நாள்தோறும் பராமரித்து தண்ணீர் ஊற்றி மாடு ஆடுகள் உடையாமல் இருப்பதற்காக மரக்கன்றுகளை சுற்றி வேலியிகள் அமைத்து பராமரித்து வருகிறார்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து மரங்கள் நட்டு வருகிறார்

இவருடைய செயலைப் பார்த்து பல தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் இவரை பாராட்டி இலவசமாகவே மரக்கன்றுகளை வழங்கி நட சொல்லி வருகின்றனர். இவரும் நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து மரங்கள் நட்டு தற்பொழுது ஐந்து ஆண்டுகளில் அழகிய பசுமை நிறைந்த வனகாடாக மாற்றி வருகிறார்.

அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு

மேலும் இவரைப் பற்றி அப்பகுதியில் பலரும் கேலி கிண்டல் செய்தாலும் எந்த ஒரு கிண்டலுக்கும் அஞ்சாமல் இந்த பணியினை தொடர்ந்து செய்து வருகின்றார். வருங்கால தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக மரங்களை நட்டு வருவதாக குறிப்பிடும் சசிராஜா இயற்கை நாம் பாதுகாத்தால் மட்டுமே அதை அடுத்த தலைமுறைக்கு பயன்பட செய்ய முடியும். எனவே இந்த பணிகளை செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல இன்றைய இளைஞர்கள் மாணவர்களுக்கு பாரம்பரிய மரத்தின் வகையோ பெயரோ செடியின் பெயரோ கூட தெரிவதில்லை அதை மாற்றும் வகையில் இனி வரும் காலங்களில் பள்ளிகளுக்கும் சென்று கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இவருக்கு ஆதரவாக அங்குள்ள இளைஞர்கள் பொதுமக்கள் சிலர் பலரும் மரக்கன்று நட போகிறீர்களா நான் உங்களுடன் வருகிறேன் இவருக்கு உறுதுணையாக மரக்கன்றுகளை நட்டு தண்ணீரும் ஊற்றி வருகின்றனர். தற்பொழுது வரை ஏரியை சுற்றி ஏராளமான நிழல் தரக்கூடிய மரமாகவும் மழை பொழிய வாய்ப்பு தரும் வகையிலும் பறவைகளுக்கு சரணாகவும் இந்த மரங்கள் உள்ளது இதனால் ஏரி பாசனம் மூலம் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைய நீர்நிலை உயர இந்த மரங்கள் வலு சேர்கின்றது.

Source link