top news India today abp nadu morning top India news February 13th 2024 know full details




புது டிவிஸ்ட்.. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..!

மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படமாட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் படிக்க.. 


அபுதாபியில் முதல் இந்து கோயில் – திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று பயணம்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன்  இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் படிக்க..

 
இனி இந்த நாடுகளுக்கு செல்லும்போது கையில் பணமே வேண்டாம் – 7 நாடுகளில் யுபிஐ சேவை அனுமதி

இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது. மேலும் படிக்க..


தீர்ந்து போன பெட்ரோல்; கறார் காட்டிய வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவருக்கு வந்த சோதனை!

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ola, uber, rapido போன்ற கார் மற்றும் பைக் டாக்ஸிகள் எத்தனையோ நகர்புறங்களில் படையெடுக்க தொடங்கி விட்டது. நம் நின்ற இடத்தில் இருந்து மொபைல் மூலம் புக் செய்தால் போதும், தங்கள் முன் வந்து நின்று ஏற்றிசென்று, செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் இறக்கிவிடுவார்கள். இப்படி ஒருபுறம் அனைத்து நல்ல விதமாக சென்றாலும், அவ்வபோது வாகன ஓட்டிகளும், வாடிக்கையாளர்களும் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.
சமீபத்தில் இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரேபிடோ டிரைவர் படும் கஷ்டத்தை பார்க்க பரிதாபமாக உள்ளது என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் படிக்க..


டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் – குவிக்கப்பட்டுள்ள போலீசார்: 144 தடை,  எல்லைகள் மூடல்

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு தெளிவான சட்ட உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க..

மேலும் காண

Source link