IPL 2024 Shubman Gill says thinking about T20 World Cup would be ‘injustice’ to GT


நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழப்பதாகும் என்று சுப்மன் கில் பேசியுள்ளார்.
டி 20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஆண்டு ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அந்த வகையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
ஆனால் லீக் போட்டிகள் வரை தோல்வியே பெறாத அணியாக இருந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களை வருத்தம் அடையச்செய்தது. 
இச்சூழலில் தான் தற்போது ஐ.பி.எல் டி20 சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 2  ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி தங்களது முதல் போட்டியினை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.
அதேநேரம், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நிலவிவருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 
நடக்க வேண்டும் என்றால் நடக்கும்:
இந்நிலையில் தான் உலகக் கோப்பை தேர்வு குறித்து இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்  பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம். ஆனால், நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழப்பதாகும். நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன். ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான்”என்று கூறியுள்ளர்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய அணிக்கு சிறந்ததை பெற்றுக் கொடுப்பது, அணிக்காக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி சக வீரர்களுக்கு உதவி செய்வது குறித்துதான் கவனம் செலுத்துகிறேன். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய எனக்கு அனுபவங்கள் உண்டு. இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் நான் இவ்வளவு தூரம் யோசிக்கவில்லை. நான் கடந்த சீசனில் கிட்டத்தட்ட 900 ரன்களை எடுத்துள்ளேன்,  என்னைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் எடுக்கப்படுவேன். இல்லையென்றால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளார் சுப்மன் கில்.
மேலும் படிக்க: IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல்‘’ராஜா’’! விராட் கோலி செய்த புது சாதனை! முழு விவரம் உள்ளே!
 
மேலும் படிக்க: Ruturaj Gaikwad: லியோ படம் பார்த்த CSK கேப்டன் ருதுராஜ்! செம குஷியில் விஜய் ரசிகர்கள்!

மேலும் காண

Source link