தமன்னா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
ரகுல் ப்ரீத் திருமணம்
முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் மற்றும் தயாரிபபாளர் ஜாக்கி பாக்னானி இருவரும் நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவாவில் தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆனந்த் கராஜ் என்ற சீக்கிய முறைப்படி இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதேசமயம் திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஷாஹித் கபூர், சோனம் கபூர், அக்ஷய் குமார், பூமி பெட்னேக்கர், ரித்தேஷ் தேஷ்முக், டைகர் ஷெராப் உள்ளிட்ட சில பிரபலங்கள் பங்கேற்றனர். 
இந்நிலையில் நேற்று தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது திருமண புகைப்படங்களை வெளிட்டார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகை இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
 


த்ரிஷா
ரகுல் ப்ரீத் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த திருமண நிகழ்வுக்கு அவரால் செல்ல முடியவில்லை. திருமணத்திற்கு செல்ல முடியாத வருத்தத்தை தெரிவித்து மனமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 நயன்தாரா
 ரகுல் ப்ரீத் இன் பதிவில் நடிகை நயன்தாரா இருவரும் தனது வாழ்த்தை தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார்
காஜல் அஜர்வால்
நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் மற்றும் ஜாக்கி தம்பதியை வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.
சித்தார்த்
 நடிகர் சித்தார்த் இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்தி கமெண்ட் செய்திருந்தார்.
இவர்கள் தவிர்த்து நடிகர் ராஜ்குமார் ராவ், பிரக்யா ஜெய்ஸ்வால்,  நடிகர் ராம் சரணின் மனைவி உபசன்னா உள்ளிட்டவர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்கள்.
இந்தியன் 2
ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அது மட்டுமல்ல அவருடைய காதலரான ஜாக்கி பாக்னானி மியா ஃபோட்டோ மியான் என்ற படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் இந்த படத்தில் அக்ஷய் குமார் சோனா பிருத்திவிராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடம் என்று நடிக்க உள்ளனர்
 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports