திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பிக் பாஸ் புகழும் சிரிப்பு நடிகருமான கூல் சுரேஷ் வாக்காளர்களிடம் பாஜகவிற்கு வாக்கு கேட்டு சாலையோர பொரிக்கடை மற்றும் காய்கறி கடைகளில் பொது மக்களுக்கு பொரி மற்றும் காய்கறிகளை எடை போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.

சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் குடித்தார்

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திருவண்ணாமலை நகரப் பகுதியில் தேரடி வீதி, திருவூடல் தெரு, காமராஜர் சிலை, தாமரை நகர், உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து தேனிமலை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் திறந்த வெளி ஜீப்பில் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு டீக்கடை அக்கா ஒருவர் டீ கொண்டு வந்து கொடுத்து எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என கூல் சுரேஷிடம் கூறினார். அப்போது டீயை வாங்கி பருகுவதற்கு முன்பாக கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீயை போடு என்று அக்காவின் பாசமான சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் டீயை குடித்தார்.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாக்கு சேகரித்த கூல்சுரேஷ்

வெயிலின் தாக்கத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் தண்ணீர் பருகியபோது வரும் காலத்தில் மலரும் தாமரையால் இனி திருவண்ணாமலை பகுதியில் ஏசி பேருந்துதான் ஓடும் எனக் கூறி வாக்குகளை சேகரித்தார் கூல் சுரேஷ். மேலும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டு தொங்கிக்கொண்டு சென்ற கல்லூரி மாணவர்கள் அடே பேருந்தில் தொங்காதீங்கடா உங்களுக்காக வீட்டில் உங்கள் குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என குறி மாணவர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்கள் இடத்திலும் இளம் தலைமுறை வாக்காளர்கள் இடத்திலும் கூல் சுரேஷ் வாக்குகளை சேகரித்தார். பின்னர் கள்ளக்கடை மூலையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடையில் கூல் சுரேஷ் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் காய்கறிகளை வியாபாரம் செய்து திருவண்ணாமலை நாடாளுமன்றத்தில் பாஜகவில் போட்டியிடும் அஸ்வத்தாமனை ஆதரித்து பிக் வாக்கு சேகரித்தார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
The pacing of the post was just right, never rushed and never dragged out unnecessarily, and a look at ponymedal…
Now planning to recommend this site in a context where my recommendations are taken seriously, and a stop at tavnero…
Pleasant surprise, the post delivered more than the headline promised, and a stop at morxavi continued that pattern of under…
Now feeling slightly more committed to my own careful reading practices having read this, and a stop at purpleorbit reinforced…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மாலை செய்தித் தொகுப்பு: இந்திய ஆண்கள் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி அணிகள் தங்கம் வென்றன; குவாஹாட்டி இரவு விடுதியில் தாக்குதல் வீடியோ வைரலானதை அடுத்து ஏழு பேரை போலீசார் கைது செய்தனர் இந்தியா செய்திகள் | ACTPnews.com

Vijay’s TVK joins INDIA bloc meet in Tamil Nadu, காங்கிரஸ் ‘வரலாற்று நாள்’ | இந்தியா செய்திகள் | ACTPnews.com

இது ஆம் ஆத்மியின் முன்முயற்சி என்று நீங்கள் சொன்னீர்கள்: அஸ்ஸாம் பயணத்தின் போது சிஜேபி கெஜ்ரிவாலிடம் இருந்து அறிவுறுத்தல்களை எடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நன்றாக குணமடைகிறேன்’: துணை விமானியால் தாக்கப்பட்ட ஃப்ளைடுபாய் விமானி ஸ்மித் மச்சார் பற்றிய தகவலை MEA வழங்குகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ரஷ்ய ராணுவத்தில் இன்னும் 55 இந்தியர்கள்: முக்கிய சந்திப்பில் மாஸ்கோவை அழுத்தி, முகவர்கள் மீது நடவடிக்கை எடு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Now noticing how rare it is to find a site that does not feel rushed, and a look at padreledge…