ADMK Meeting: "கூட்டணி குறித்து கவலை வேண்டாம்" மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இ.பி.எஸ். உத்தரவாதம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்தும், கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும், கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்.

கூட்டணி குறித்து பார்த்துக்கொள்கிறேன்:

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி மாவட்ட செயலாளர்களை வேட்பாளர்கள் தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். கூட்டணி முடிவானதும் வேட்பாளர்கள் குறித்து இறுதி செய்யப்படும் என குறிப்பிட எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி வரை மாவட்ட செயலாளர்கள் சென்னையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தனித்தனியாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேச இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். அதிமுகவிற்கு இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. எந்த கட்சி உடன் கூட்டணி ? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Source link