top news India today abp nadu morning top India news March 7 2024 know full details



வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி – விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், திருத்தப்பட்ட அளவுகோலின்படி அரசு வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்வாய், விளையாட்டில் குதித்தால் கெட்டு போவாய் என்று மக்கள் சொல்லும் காலம் இப்போது போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. இந்தநிலையில், கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு வேலையில் எளிதாக பதவு உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க..

இன்று வெளியாகிறது? காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் – அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டி?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய, காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் பாஜக, பல மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்துள்ளது. முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..

பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்…கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள், சாவித்ரிபாய் புலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் படைப்புகளும் பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கன்னட மொழி ஆகிய பாடப் புத்தகங்களில் இருந்த சில பாடங்கள், கடந்த பாஜக ஆட்சியில் நீக்கப்பட்டன. குறிப்பாக, சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரள மாநிலத்தின் நாராயண குரு ஆகியோரின் பாடங்கள் நீக்கப்பட்டன. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. மேலும் படிக்க..

ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள் – நீருக்கடியில் நாட்டின் முதல் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

கொல்கத்தாவில் உள்ள நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில், விரைவில் பயணிகள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.  ஹூக்ளி ஆற்றின் கீழ் கட்டப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு கேர்டாரின் ஒரு பகுதியாகும். இந்த பிரிவு ஹவுரா மைதானத்தை எஸ்பிளனேடுடன் இணைக்கிறது. திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், பயணிகள் சேவைகள் பிற்காலத்தில் தொடங்கும், என்று CPRO மெட்ரோ ரயில்வே கௌசிக் மித்ரா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..

மேலும் காண

Source link