Bharat Jodo Nyay Yatra: மேற்கு வங்கத்தில் நுழையும் ராகுல் காந்தியின் யாத்திரை… மாம்தா பானர்ஜிக்கு முக்கிய கடிதம் எழுதிய கார்கே!

பாரத் ஜோடோ நியாய யாத்திரை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அதாவது இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரையானது 110 மாவட்டங்களை கடந்து மார்ச் மாதம் 20 ஆம் தேதி மும்பையில் நிறைவு பெற இருக்கிறது. தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையானது நாகலாந்து, அசாமை கடந்து மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கம் மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கு வங்கத்தை அடைய உள்ள நிலையில் அதற்கான பாதுக்கப்புக்கோரி அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்று எழுதியிள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு கார்கே முக்கிய கடிதம்:

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நடைபயணத்தில் உள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், ராகுல் காந்திக்கும் பாதுகாப்பு  வழங்க வேண்டும். அஸ்ஸாமில் நடைபயணம் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் சில தவறான ஆட்களால் நடைபயணத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடைபயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காந்தி குடும்பத்துடன் உங்களுக்கு இருக்கும் அன்பான உறவைப் பற்றி நன்கு அறிவேன். நடைபயணம் பாதுகாப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் நீங்கள் உடனடியாக செய்வீர்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுப்பது சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்.

பாஜக உருவாக்கியுள்ள ஜாதி, மத மத பிரிவினைகளைத் தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோளாக ராகுல் காந்தி எப்போதும் கருதுகிறார். இந்த நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும்  அரசியல் நீதிகளைப் பெற்றுத் தருவதே இதன் நோக்கம். அதனால்தான் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது. மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள சாதி மத பாகுபாட்டினை அறுத்தெறிந்து அனைவருக்குமான மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதே இதன் நோக்கம்” என்று அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்

முன்னதாக, பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுலின் இந்த நடைபயணத்திற்கு பல்வேறு தடைகள் உருவானதும், பாஜக ஆதரவாளர்கள் நடைப்பயணத்தை எதிர்த்து, ராகுல் காந்தியின் பேருந்து செல்லும் வழியில் கொடிகளுடன் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’ – குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ்..

மேலும் படிக்க: AISHE report: வெளியான உயர்கல்வி ஆய்வறிக்கை: இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகக் கல்லூரிகள்- தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

Source link