Poorest Countries In The World South Sudan On Top With Dollor 492 GDP Per Capita


Poorest Coutries: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. 
முதலிடத்தில் சூடான்:
சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும், அன்றாட தேவைகளுக்காக செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஐஎம்எப் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 
உலகின் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான், உலகின் மிக இளமையான நாடாக அறியப்படுகிறது.  அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு சண்டை, உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லாதது போன்ற காரணங்களால் அந்த நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான், வறுமையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தெற்கு சூடான் உள்ளது. இந்த நாட்டில் தனிநபர் ஜிடிபியின் பங்கு என்பது 492.72 டாலராக உள்ளது.  தெற்கு சூடானை தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் புருண்டி உள்ளது. இந்த நாட்டில் ஜிடிபியில் தனிநபரின் பங்கு 939.42 டாலராக உள்ளது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு  ($1,140), காங்கோ ஜனநாயக குடியரசு ($1,570), சொம்சாம்பிக் ($1,650), மலாவி ($1,710), நைஜர் ($1,730), சாட் ($1,860), லைபீரியா ($1,880), மடகாஸ்கர்  ($1,990) உள்ளன.
என்ன காரணம்?
ஏழ்மையான நாடுகளாக இருக்கும் இந்த நாடுகளில் பொதுவான பிரச்னைகளே உள்ளன.  நாட்டின் உள்கட்டமைப்பு பாதிப்பு, அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு மோதல், விவசாய பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நாடுகள் கடுமையாக வறுமையை எதிர்கொண்டு வருகின்றன.   இந்த நாடுகளின் வறுமை, அங்குள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகங்களுக்கு அழைக்கு விடுக்கும் விதமாக இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது, பொருளாதார பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், அரசியல் ஸ்திரத்தன்மையை வளர்ப்பது ஆகியவை இந்த நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான ஒன்றாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 
இந்தியாவின் நிலை என்ன?
ஐரோப்பியா நாடான லக்சம்பேர்க் உலகின் பணக்கார நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியன் அடிப்படையில், இந்த நாடு பணக்கார நாடாக அறியப்படுகிறது.  இந்த நாட்டின் தனிநபர் ஜிடிபியின் பங்கு 145,834 டாலராக உள்ளது.  இதற்கிடையில், இந்தியா 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  9.89 டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க
Mlc Kavitha: தெலங்கானாவில் பரபரப்பு – முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை
Lok sabha Election: சந்தேகமே வேண்டாம்! பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி – ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

மேலும் காண

Source link