ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 99-வது ஆட்டத்தில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணி விளையாடிவருகிறது.

கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..?

கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தது. மறுபுறம், அதேநாளில் தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் யு மும்பா அணியை 50-34 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் நேருக்குநேர்:

ப்ரோ கபடி லீ வரலாற்றில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில், அதிகபட்சமாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 5 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் டிரா ஆகியுள்ளது.

கடைசியாக இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை 25-24 என்ற கணக்கில் வீழ்த்தியது.

புள்ளி பட்டியலில் இரு அணிகளின் தரவரிசை:

16 போட்டிகளுக்குப் பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஜெய்ப்பூர் அணி 11 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 66 புள்ளிகள் குவித்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

அதேசமயம், தமிழ் தலைவாஸ் 40 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 7 வெற்றியும், 9 முறை தோல்வியடைந்தாலும், கடந்த சில போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

இரு அணிகளின் விவரம்:

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

ரைடர்கள்- ராகுல் சவுதாரி, அர்ஜுன் தேஷ்வால், அஜித் குமார், பவானி ராஜ்புத், தேவாங்க், நவ்நீத் ஷெராவத், அமீர் ஹொசைன் முகமதுமலேகி, ஷஷாங்க், அபிஜீத் மாலிக்.

டிஃபெண்டர்கள்- சுனில் குமார், சாகுல் குமார், அங்குஷ், சுமித், அபிஷேக் கே.எஸ்., ரேசா மிர்பாகேரி, லக்கி ஷர்மா, ஆஷிஷ், லாவிஷ்.

தமிழ் தலைவாஸ்

ரைடர்ஸ்- நரேந்தர் கண்டோலா, அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின்.

டிஃபெண்டர்கள்- சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்.

ஆல்-ரவுண்டர்கள்- தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யு.

இன்றைய போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கற்கள்:

பிகேஎல்லில் 100 டிபெண்ஸ் புள்ளிகளை எட்டுவதற்கு தமிழ் தலைவாஸின் எம்.அபிஷேக்கிற்கு இன்னும் 7 டிபெண்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- சாஹுல் குமார், ரேசா மிர்பாகேரி, அங்குஷ் ஜூனியர், சுனில் குமார் (கேப்டன்), அபிஷேக் கே.எஸ், அர்ஜுன் தேஷ்வால், வி அஜித் குமார்.

தமிழ் தலைவாஸ்- சாகர் (கேப்டன்), சாஹில், மோஹித், அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…