Sun tv Ethirneechal serial Today episode April 8 written update


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடருக்கான இன்றைய (ஏப்ரல் 8) தேதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. பெண்கள் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும் என்பதை மைய கருவாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தொடர்ச்சியாக பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தடுத்து நிறுத்தி குணசேகரனே வெற்றி பெறுவது போல கதைக்களம் நகர்ந்து வருகிறது. இதனால் கதைக்களத்தின் போக்கை மாற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 
 
அந்த வகையில் கடந்த எபிசோடில் குணசேகரன் மாமா சாமியாடி கோயிலில் இருக்கும் போது சாமி வந்து “இனிமேல் நீ ஜெயிக்க முடியாது” என சொல்ல குணசேகரன் முகமே சுருங்கி போனது. இதனால் குணசேகரன் வேண்டுமாலும் வருத்தப்படலாம் ஆனால் ரசிகர்களுக்கு சற்று மனநிம்மதியை கொடுத்துள்ளது. 
 

 
அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியானதில் சித்தார்த்தை காணவில்லை என்ற விஷயத்தை உமையாள் குணசேகரனிடம் சொல்கிறாள். அதை கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். “நேற்று ராத்திரி ஜனனியும் சக்தியும் வெளியில் கிளம்பி போனதில் இருந்தே சித்தார்த்தை காணவில்லை. அப்போ தான் ஏதோ நடந்து இருக்கு” என உமையாள் சொல்லவும் அதிர்ச்சியில் உறைகிறார் குணசேகரன். காரில் உட்கார்ந்து இருந்த தர்ஷினி இதை கேட்டு நிம்மதி அடைகிறாள். 
 
சக்தி கதிருக்கு போன் செய்து பேசுகிறான். “உன்னோட அம்மாவும் தங்கச்சியும் இருந்தா தானே என அந்த அம்மா கேட்டுச்சு இல்ல” என சக்தி தனக்கு இருந்த சந்தேகத்தை கேட்கிறான். “அது தான் பாய்ண்ட்டே. அந்த பொம்பளை சொன்னதை வைச்சு நம்ம அண்ணனே ஜனனியை தூக்கி இருந்தா?” என கதிர் குணசேகரன் மீது சந்தேகப்பட்டு சொல்ல சக்தி ஷாக் ஆகிறான். 
 
 

தர்ஷினியை குணசேகரன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். உமையாள் தர்ஷினியை கைத்தாங்கலாக அழைத்து செல்கிறாள். அப்போது சில பெண்களுடன் வந்து நின்ற ஈஸ்வரி குணசேகரனை பார்த்து முறைக்கிறாள். உமையாளிடம் சொல்லி தர்ஷினியை உள்ளே அழைத்து செல்ல சொல்கிறார் குணசேகரன். “இவங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு அதுக்கு அப்புறம் இங்க இருந்து நகருங்க” என செக் வைக்க உமையாள் மற்றும் குணசேகரன் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். அந்த பெண்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.  
 

மேலும் காண

Source link