7 Am Headlines today 2024 March 13th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் நடிகர் சரத்குமார்
இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் பெற விண்ணப்பம் இன்று முதல் அமல் 
தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கினர் 
லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு
சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவர் மற்றும் வாலிபர் என இரண்டு பேரிடம் மத்திய சிறையில் சிறப்பு குழு விசாரணை
ஜாபர் சாதிக் விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் திமுக அரசு வீட்டுக்குச் செல்லும் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தமிழ்நாடு காவல்துறையில் 5 ஏ.எஸ்.பி.க்கள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 
தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா: 

மாதாந்திர பூஜைக்காகசபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி.
ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.
மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்திற்கு சென்ற வண்டி மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்பிஐ வங்கி; தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்.
சிஏஏவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; தலைநகர் டெல்லி, அசாமில் தீவிரமடையும் போராட்டம் – பிரதமர் மோடி, அமித் ஷா உருவபொம்மை எரிப்பு

உலகம்: 

பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு.
ரஷ்யாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழப்பு என தகவல்.
செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியளர்கள் ஏவுகணை தாக்குதல்.
சீனா நிலக்கரி சுரங்க கிடங்கு இரிந்து விழுந்து விபத்து – இதுவரை 5 பேர் உயிரிழப்பு.
வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்போம் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சபதம். 

விளையாட்டு:

பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல்.
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பெங்களூரு அணி.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

 

Published at : 13 Mar 2024 06:58 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link