இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறது

இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையை ரூ.209 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் ரூ.1731.50 க்கு விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

விலை உயர்ந்தால், உணவகங்களில் உணவு விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.