நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் 
2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி வேலூரில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (20.03.2024) முதல் (27.03.2024) வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் வேலூரில் முதல் ஆளாக நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்போது சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு, வேட்பாளரே சின்னங்கள் தேர்வு செய்வார்கள். அதன்படி, மன்சூர் அலிகான் வேட்பு மனுவின்போது தனக்கு 176 நபர் சின்னமான லாரியும் 91-பலாப்பழம், 9-வது சின்னமான கிரிக்கெட் பேட் ஆகிய மூன்று சின்னங்களை தேர்வு செய்துள்ளார்.

 
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கினார்
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தின் போது கிரிக்கெட் விளையாடுவது, வாகிங்க் போவது, கறிக்கடைகளுக்கு சென்று கறி வெட்டுவது என தன் பாணியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், அதிக அளவில் இஸ்லாமிய மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதிய சுமார் 1.30 மணி அளவில் நடிகர் மன்சூர் அலிகான் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் 
“வெற்றி வேண்டுமா போட்டு பாருடா எதிர்நீச்சல் என பாட்டு பாடிய” மன்சூர் அலிகான். 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே ஓட்டுக்காக குனிஞ்சு, குனிஞ்சு ஓட்டு கேட்கிறார் நான் எல்லாம் எம்மாத்திரம்.  பிரதமர் மோடியே ஓட்டுக்காக பிச்சை எடுத்து வருகிறார், நானும் ஓட்டு கேட்டு பிச்சை எடுக்க வேண்டும். இங்கு பல பேர் ஓட்டு பிச்சை எடுத்து தான் முதல்வர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். பலாப்பழ சின்னத்தை சின்னமாக கேட்டுள்ளேன். பலாப்பழம் சின்னம் கிடைத்தால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று அம்மா ஓட்டு போடுங்கமா என ஓட்டு கேட்க வேண்டும். பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி ஆகிய மூன்று சின்னத்தை கேட்டுள்ளேன் என தெரிவித்தார் ⁩

Source link