7 Am Headlines today 2024 20th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும், மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதிகரிப்பு, மதி இறுக்கம் (Autism) உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மையம் தொடங்கப்படும் என பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றது.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் கானல் நீர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்தியா:

விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சோளம், சில பருப்பு வகைகள், காட்டன் போன்றவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு பரிந்துரை வழங்கியது. ஆனால், மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
சந்தேஷ்காலி விவகாரத்தை மணிப்பூருடன் ஒப்பிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

உலகம்:


பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா. இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திய அவர், காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். 

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விளையாட்டு:

அம்பயர்ஸ் கால்’ முறை நீக்கப்பட வேண்டுமென இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், மீண்டும் களமிறங்க உள்ளார்.
ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிக்கான பாயிண்ட்ஸ் டேபிளில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Published at : 20 Feb 2024 07:11 AM (IST)

மேலும் காண

Source link