தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துபாண்டியை கொல்ல போன சண்முகத்தை பரணி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வீட்டுக்கு வந்த ஷண்முகம் இசக்கியிடம் அவனை கொல்லுற வரைக்கும் இந்தத் தாலி கழுத்திலே இருக்கட்டும் என கூறுகிறான். பிறகு பரணி சண்முகத்திடம் அன்பாகப் பேச முயற்சி செய்ய, “உன் அண்ணனை காப்பாத்த இப்படி செய்யாத” என சண்முகம் கோபப்படுகிறான். “என்ன இருந்தாலும் அவன கொல்லாமல் விட மாட்டேன்”என்று புலம்ப, பரணி ஊசி போட்டு அவனைத் தூங்க வைக்கிறாள்.
மறுபக்கம் சௌந்தரபாண்டி பாண்டியம்மா ஆகியோர் “பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷத்தை கனி மாத்தி குடிச்சிட்டா” என்று பேசிக் கொண்டிருக்க, இதை சிவபாலன் கேட்டுவிட, இதை இவர்கள் யாரோ ஒட்டு கேட்டு விட்டதாக உணர்கின்றனர்.
உடனே “இந்த விஷயங்கள் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும், அவன் யாருன்னு கண்டுபிடிச்சு கொன்னுடனும்” என்று சொல்ல சிவபாலன் எஸ்கேப் ஆகிறான். அடுத்து மறுநாள் காலையில் பரணி வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கான காரணத்தை சொல்ல, பரணி “இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்லாத, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி அனுப்புகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Vijay: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வாழ்த்து சொன்ன ஷாருக் கான்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி
Actor Manikandan: ஆஸ்கர் மேடைல பேச 10 வருஷம் முன்னாடியே ரிகர்சல் செய்தேன்: மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்யம்!
மேலும் காண