தமிழ்நாடு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மவுன குருவானது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக – தேமுதிக 3வது கட்ட ரகசிய பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன – தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார்.
தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.
சீர்மரவினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – நடிகர் கருணாஸ்.
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு.
கோடநாடு பங்களாவில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான அறிக்கை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பு
இந்தியா:
சர்வாதிகாரத்திடம் இருந்து ஜனநாயகத்தை காப்பதற்கான கடைசி வாய்ப்பு – மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது; பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை
18வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமைத் தேர்தல் ஆணையம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிக்கப்படவில்லை.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ம் தேதி நடைபெறுகிறது – தலைமைத் தேர்தல் ஆணையம்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது
சிக்கிமில் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது.
தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்
உலகம்:
நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்; 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் உயிரிழப்பு.
இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல் – பாலஸ்தீனர்கள் 36 பேர் உயிரிழப்பு.
ரஷ்ய தேர்தலில் மீண்டும் புதினே அதிபராக வர வாய்ப்புள்ளதாக தகவல்
அமெரிக்காவில் 2 அடி நீள வளர்ப்பு பல்லி கடித்ததில் உரிமையாளர் மரணம்
விளையாட்டு:
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2024: காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பதிரனா விலகுவதாக தகவல்.
டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினுக்கு செங்கோல் வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
ஐபிஎல் 2024: சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்குகிறது.
டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்
Published at : 17 Mar 2024 07:12 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண