லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவதாக கூட்டணி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பகுதி குறித்து சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறி இணையத்தில் வைரலானது. படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை, படத்தின் பாடல்கள் கூட திருடப்பட்டது தான் என பரபரப்புக் குற்றச்சாட்டை இசையமைப்பாளர் பரணி முன்வைத்துள்ளது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தரமான திரைக்கதையைக் கொண்ட ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது எப்படி ஒரு இயக்குநரின் கடமையோ, அதே போல ஒரு படத்தின் பாடல்களையும் சிறப்பாகக் கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. இன்றைய காலக்கட்டத்தில் படத்தின் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் போதும் ஏதாவது ஒன்றை மிக்ஸ் செய்து ஒரு படமாக கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் சினிமா இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் இசைமைப்பாளர்கள் பாடலுக்கு டியூன் போடும்போது இயக்குநர்களும் அருகில் இருந்து கரெக்ஷன் எல்லாம் சொல்வார்கள். ஆனால் இன்று நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பாடலின் டியூனை பைலாக அனுப்ப சொல்கிறார்கள். படத்துல ஒரு பாடல் ஹிட் அடித்தாலே போதுமானது என நினைக்கிறார்கள். இது தான் இன்றைய சினிமாவின் நிலை. லியோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இசையமைப்பாளர் பரணி அப்படத்தின் பாடல் காப்பி அடிக்கபட்டது என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். லியோ படத்தில் இடம் பெற்ற ஆர்டினரி பெர்சன் பாடலின் டியூன், இசையமைப்பாளர் ஒட்னிக்கா, பீக்கி பளைண்டெர்ஸ் என்ற வெப் சீரிஸுக்கு இசையமைத்தது. இன்றைய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து டியூனை காப்பி அடித்து இங்கே நம்பர் ஒன் இசையமைப்பாளர்களாக வலம் வருகிறார்கள்.
எனக்கு ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் போதும். மறுபடியும் நான் எனக்கான மார்க்கெட் ஏற்படுத்திவிடுவேன். அனிருத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் என்னால் இன்றைய 2k கிட்ஸ்களின் பல்ஸ் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் இசையமைக்க முடியும் என சவால் விடுத்துள்ளார் இசையமைப்பாளர் பரணி.
நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து, துளித்துளியாய், திரும்ப திரும்ப பார்த்து பார்த்து, முதலாம் சந்திப்பில் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் பரணி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண