வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு.
நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் முதல் முறையாக விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். ஒரு பக்கம் இந்த பாடல் ட்ரெண்டிங்காகி வரும் அதே வேளையில் இந்த பாடலில் சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இருப்பதாகவும், அது பிரச்சினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இளைஞர்கள் மத்தியில் வெறியை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி பாடலை நீக்கி, விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.
இப்படி ஒரு பக்கம் ‘விசில் போடு’ பாடல் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் மறுபக்கம் அது மேலும் மேலும் வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 17 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் விசில் போடு பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலான ‘விசில் போடு’ பாடலுடன் கொலாப்ரேஷன் செய்து சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் GOAT படத்தின் விசில் போடு பாடல் பட்டையை கிளப்பி வரும் அதே வேளையில் CSK அணியுடன் கொலாப்ரேஷன் செய்துள்ள இந்த பாடலும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. ஐபிஎல் மேட்ச் களைகட்டி வரும் இந்த நேரத்தில் இன்றைய நாள் முழுவதும் விசில் போடு வைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் உற்சாகமும் இந்த பாடலும் கூடுதல் எனர்ஜியை கொடுக்கிறது. இந்த கொலப்ரேஷன் வீடியோ தாறுமாறாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை விஜய் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் டேக் செய்துள்ளார்.
மேலும் காண