7 am headlines today 2024 19th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்: படகுகளில் கருப்பு கொடி ஏற்றம்
கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அரசு பணிகளில் 60, 567 பேர் நியமனம் – தமிழ்நாடு அரசு விளக்கம்
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன் பேட்டி
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம். 
சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகிறது. 
கும்பகோணம்: பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ரயிலில் அடிபட்டு 14 ஆடுகள் உயிரிழப்பு

இந்தியா: 

பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல, நாட்டின் நலனுக்காக 3வது முறை ஆட்சி அமைக்க பாஜக விரும்புகிறது. அடுத்த 100 நாள்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் – ராகுல் காந்தி உறுதி
நாடு முழுவதும் 370 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளது.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

உலகம்: 

6 மாதங்கள் சிறையில் இருந்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு. 
ஜெர்மன் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பாலஸ்தீன அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் – நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விளையாட்டு: 

பெங்கால் வாரியஸ் அணியை 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசியன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. 
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 

Published at : 19 Feb 2024 07:06 AM (IST)

மேலும் காண

Source link