Navjot Singh Sidhu Reveals IPL Commentary Earning Rs 25 Lakh Per Day Latest Sports News Tamil


கோலாகலமாக தொடங்கும் ஐ.பி.எல்:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கள் உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் கோலாகல நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். 
இந்நிலையில் தான்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தனது எக்ஸ் வலைதளத்தில், நவ்ஜோத் சிங் சித்து ஐபிஎல் 2024-ல் வர்ணனை செய்யவுள்ளதாக பதிவிட்டுள்ளது.
வர்ணனையாளராக களம் இறங்கும் சித்து:
முன்னதாக, கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வீரராக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யத் தொடங்கிய இவர் தனது ஒற்றை வரி வர்ணனை மூலம் புகழ்பெற்றார். அதேபோல்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருந்துள்ளார்.
இதனிடையே இந்த சீசனில் வர்ணனை செய்ய இருக்கும் சூழலில் இது குறித்து அவர் பேசுகையில், “ கிரிக்கெட் தான் எனது முதல் காதல். உங்கள் பொழுதுபோக்காக உங்கள் தொழிலாக மாறினால் அதைவிட சிறந்தது எதுவுமில்லை. ஒரு வாத்து எப்படி நீந்துவதை மறக்காதோ, மீன் தண்ணீரில் இறங்குவது போல நான் வர்ணனை செய்வேன். அரசியலில் இருந்து விலகுவது எனக்கு கடினமாக இருந்தது, ஆனால்  அதன்பின்னரும் அற்புதங்கள் நடக்கும் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது எந்த சூழ்நிலையிலும் மன தைரியம் என்னை சரியாக்கும். கிரிக்கெட்டில், நான் பல முறை மறுபிரவேசங்களை செய்துள்ளேன், வர்ணனைக்கு இது எனது முதல் மறுபிரவேசம். 1999 முதல் 2014-15 வரை நான் வர்ணனை செய்தது என் நினைவில் இருக்கிறது.
நான் கிரிக்கெட்டை விட்டுவிட்டு வர்ணனையில் சேர்ந்தேன், அதை என்னால் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உலகக் கோப்பையில் 10-15 நாட்கள், சித்துயிசம் என்ற வார்த்தை வந்தது. நான் ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன். யாரும் நடக்காத அந்த பாதை சித்து பாதையானது. முழு போட்டிக்கு ரூபாய் 60 முதல் 70 லட்சமும் ஐ.பி.எல் போட்டிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 25 லட்சமும் பெற்றேன். திருப்தி என்பது பணத்தில் இல்லை.” என்று கூறினார்.
 
 
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 
 

மேலும் காண

Source link