இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பினால் நேற்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகள் பவதாரிணியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து அன்பு மகளே என பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்குமே அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
அன்பு மகளே… pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024
இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இவர் நேற்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கே காலமானதாக கூறப்படுகின்றது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
தந்தை இளையராஜா சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசைகளில் இசையமைத்துள்ளார். இவர் இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில் வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலுக்கும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலுக்கு எப்ப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. அதேபோல் அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பாடலுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
கடந்து 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் நேற்று காலமானார். இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சபரிராஜ் ஹோட்டல் தொழில் செய்து வருகின்றார். பவதாரிணியைப் பொறுத்தவரையில் பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது.
ரேவதி இயக்கத்தில் ஷோபனா நடித்த மித்ர் மை ஃபிரெண்ட் என்ற படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். இவரது இசையில் இலக்கணம், அமிர்தம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்திப் படமான பிர் மிலாங்கே படத்திற்கும் இசையமைத்துள்ளார்.






















Закажите G202 https://mismar74.ru/G202.html онлайн. Актуальные цены, наличие на складе, технические характеристики, выгодные условия покупки и быстрая доставка по всей России.