Director RV Udayakumar criticized actor Vijay know full details | இது தப்பு இல்லையா? விஜய்யை விளாசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்


காடு வெட்டி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது, “பேரரசும், விஜய்யும் சேர்ந்து பண்ண படம் தான் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு சிவகாசியும், திருப்பாச்சியும் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படங்கள். விஜய்யோட 150, 147, 148 உங்க பேர்ல வர வேண்டாமா? இதை எப்படி மிஸ் பண்றாங்க நடிகர்கள். இது தப்பு இல்லையா?.
நம்மை வளர்த்து மிகப்பெரிய அளவில் தூக்கி விட்ட இயக்குனரையும், இசை அமைப்பாளரையும் சேர்ந்து கூட்டிக்கிட்டு போறது தானே நம்ம தமிழர் பண்பாடு? சில டைம்ல பண்பாடுகளை மறந்து விட்டால் அது நம்மள திருப்பி அடிக்கும். சும்மா மேடையில பார்த்த அப்போ எனக்கு சூப்பர் படம் கொடுத்தாரு. இப்போ அவருக்கு என்ன கொடுக்குறன்றது தான் முக்கியம்.
இது எல்லாத்துக்கும் சொல்றேன் வெற்றியாளர்கள் வெற்றி பெற்ற பின் தன் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களை மறந்து விடுவது சினிமாவில் வாடிக்கையாகி விட்டது. இதை மறு சீராய்வு செய்ய வேண்டும். ஒரு இசை கலைஞன் எப்போதுமே இசைக் கலைஞனாதான் இருக்கான். அவன் மாடர்ன் இசைக் கலைஞனோ அல்லது பழைய இசைக் கலைஞனாவோ மாறாது. ஏன்னா இசைக் கலைஞன் டே டு டே கத்துக்கிட்டே இருக்கான்.
ஒரு இயக்குனர் டே டு டே அடுத்து என்ன பண்றதுனு சிந்திச்சிக்கிட்டே இருக்கான். ஒரு கதை ஆசிரியர் டே டு டே ஒரு கதையை அடுத்த கட்டத்துல ஒரு கதையை எப்படி வித்தியாசமா சொல்வது என யோசிச்சிக்கிட்டு இருக்கான். ஒரு நடிகன் நம்ம அடுத்த படங்கள்ள எப்படி இதுவரை நடிக்காத நடிப்பை காட்டுவது என திங்க் பண்றான். இதுல ஒரு சாராரை மட்டும் நாம் பயன்படுத்திக்கிட்டு மற்ற ஏணிகளை எல்லாம் தள்ளி விட்டுச் செல்வது நியாம் இல்லை. இது எனது கருத்து இதை நான் பதிவு செய்கிறேன்”. இவ்வாறு இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசினார். 
மேலும் படிக்க 
HBD Charle: தமிழ் சினிமாவின் பொக்கிஷம்: சார்லியின் பிறந்தநாள்.. அவர் நடிக்க வந்த கதை தெரியுமா?
Dhanush – Manjummel Boys: அப்படிப்போடு.. மாறுபட்ட கதைக்களத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருடன் இணையும் தனுஷ்?
Santhosh Narayanan: ஏ.ஆர்.ரஹ்மானும் ஏமாந்துள்ளார்: என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன் விளக்கம்

மேலும் காண

Source link