டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, இந்த போட்டி தர்மசாலவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜெய்ஸ்வால் படைக்கவிருக்கும் சாதனை:
இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க உள்ளார். அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு சீரிஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் இந்த சாதனையை படைத்தார். அந்த தொடரில் அவர் 655 ரன்களை எடுத்திருந்தார். இச்சூழலில் தான் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான சீரிஸில் ஜெய்ஸ்வால் 655 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட்டில் அவர் 1 ரன்களை பெற்றால் இந்த சாதனையை முறியடிப்பார். அதேபோல், இந்த தொடரில் 693 ரன்கள் எடுத்தால் 21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ( 692 ரன்கள்) வசமே உள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

























Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…