D50 First Look Out Dhanush 50 Movie Titled Raayan AR Rahman Musical


தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்திற்கு ராயன்  என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில்  நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 
D50
தனுஷ் இயக்கி நடித்திருக்கும்  D50 படம் கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது.  தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  முன்னதாக ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்களை வைத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் சிறப்பான வெற்றி பெற்றது. ஒரு படத்தை இயக்குவதற்கு தான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பதாக தனுஷ் தெரிவித்து சில டைரக்‌ஷனுக்கு கேப் விட்டார். தற்போது தனுஷ் அதிதீவிரமான உழைப்பை போட்டு இயக்கி முடித்திருக்கும் படம் தான் D50. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

#D50 is #Raayan 🔥🎬 Written & Directed by @dhanushkraja 🎵 Music by @arrahman Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX
— Sun Pictures (@sunpictures) February 19, 2024

மேலும் காண

Source link