பிக்பாஸ் சீசன் 7:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிய உள்ளது.   இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக இந்த பிக்பாஸ் இருந்தது.
பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிகட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஷ்ணு ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். இதுவரை அக்ஷயா, கானா பாலா, அனன்யா, வினுஷா, ப்ராவோ, விக்ரம், கூல்சுரேஷ் ஆகியோர் வீட்டிற்குள் எண்டரி கொடுத்துள்ளனர். 
இந்த நிலையில், இன்று முதல் ஆளாக வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ்  வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அவர் உள்ளே சென்றதும் போட்டியாளர்களிடையே சண்டையை  மூட்டிவிடும் வகையில் பேசி உள்ள காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், தினேஷிடம் சில பாசிட்டிவ் கமெண்ட்டுகளை பேசியிருக்கிறார். இது சம்பந்தமான காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, “நீங்க சரியா ஒன்று கண்டுபிடிச்சிங்க. நேற்று தான் நான் பார்த்தேன். நான் என்ன சொல்லுறேன் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். உள்ளே இருந்துட்டு வெளியே என்ன நடக்குது என்று சரியா சொல்லுறீங்க. சூப்பர். நல்லா விளையாடுறீங்க” என்று ஜோவிகா தினேஷிடம் கூறுகிறார். 
டைட்டிலை வெல்வாரா தினேஷ்?
அதாவது, அர்ச்சனா பி.ஆர். வேலை பார்த்து வந்ததாக  தினேஷ் இரண்டு நாளைக்கு முன்பு கூறியிருந்தார். இதை தான் ஜோவிகா மறைமுகமாக கூறுவதாக தெரிகிறது.   வைல்டு எண்டரியாக வந்த தினேஷ்க்கு ஆரம்பத்தில் டாக்சிக் என்று ரசிகர்கள் முத்திரை குத்தினர். பின்னர், போக போக இவருக்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வர தொடங்கியது.
இவரது கேம் பிளானை ரசிகர்கள் பாராட்டி வந்தனர். அதாவது, சரியாக கேமை புரிந்துகொண்டு விளையாடுவதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வேலைகளை பொறுப்புடன் செய்வதாகவும் சக போட்டியாளர்களே கூறியுள்ளனர். 
பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தினேஷ்க்கு வாக்குகள் அதிகளவில் குவியத் தொடங்கியுள்ளன. அர்ச்சனாவுக்கு இருந்து வந்த நிலையில், தற்போது தினேஷ்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிகிறது. அதேபோல இவரும் கூட, டைட்டில் வின்னராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தான் வெற்றி பெற்றால் முதலில் தனது மனைவியை சந்தித்து பிரச்னையை முடிப்பதாகவும் தினேஷ் தெரிவித்திருந்தார். இதுபோன்று நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link


Latest News

View All

  1. Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed