Singapore Prime Minister Lee To Resign On May 15, Deputy PM Wong Set To Succeed in tamil | Singapore PM: போதும், எனக்கு வயசாயிடுச்சு..! பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர் லீ


Singapore PM Resign: லீயின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை பிரதமரான வோங், புதிய பிரதமராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா..!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பிரதமர் பதவிய ஏற்று சுமார்  20 ஆண்டுகள் ஆன பிறகு, வரும்  மே 15 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வாரிசு திட்டங்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, லீ திட்டமிட்டதை விட தாமதமாக ஆட்சியை விட்டு வெளியேறுகிறார்.   72 வயதான லீ, ஆகஸ்ட் 12, 2004 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு:
தனது  ராஜினாமா தொடர்பான சமூக வலைதள பதிவில், “கடந்த நவம்பரில், 2025ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். அதன்படி, மே 15, 2024 அன்று எனது பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவேன், அதே நாளில் DPM (துணைப் பிரதமர்) லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராக பதவியேற்பார். எந்த நாட்டிற்கும் தலைமை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்க தருணம். லாரன்ஸ் மற்றும் 4G குழு (நான்காம் தலைமுறை) மக்கள் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைத்துள்ளனர், குறிப்பாக தொற்றுநோய்களின் போது. 
ஃபார்வர்டு சிங்கப்பூர் பயிற்சியின் மூலம், அவர்கள் பல சிங்கப்பூர் மக்களுடன் இணைந்து நமது சமூகத் தொடர்பைப் புதுப்பிக்கவும், புதிய தலைமுறைக்கான தேசிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கவும் பணியாற்றியிருக்கிறார்கள். இவை எப்போதும் அரசாங்கத்திற்கு முதன்மையானதாக இருக்கும். லாரன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உங்களின் முழு ஆதரவை வழங்குமாறும், சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் அனைத்து சிங்கப்பூரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என லீ ச்யென் தெரிவித்துள்ளார்.
யார் இந்த லீ சியென்:
70 வயதிற்கு மேல் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று லீ, கடந்த  2012 ஆம் ஆண்டு அறிவித்தார்.  அதைதொடர்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ப்தவ்யை ராஜினாமா செய்துள்ளார். இவர் சிங்கப்பூரின் முதல் பிரதம மந்திரி லீ குவான் யூவின் மூத்த மகனாக 1952 இல் பிறந்தார் , பள்ளியில் கணிதவியலாளராக சிறந்து விளங்கினார். 1974 இல் கணித டிரிபோஸில் மூத்த ரேங்லராக பட்டம் பெற்றார் (முதல் வகுப்பு கௌரவங்களுக்கு சமமானவர்). அவர் கணினி அறிவியலில் டிப்ளமோ பட்டமும் பெற்றிருந்தார். 80-கள் மற்றும் 90-களின் முற்பகுதியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமர் வோங்:
சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) அரசியல் வாரிசு, துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் அடுத்த பிரதமராக கடந்த 2018ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.  ஆனால் 60 வயதன அவர் தனது வயதை காரணம் காட்டி, கடந்த ஏப்ரல் 2021 இல், பிரதமர் பதவி வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார்.  இதையடுத்து ஒரு வருட ஆலோசனைக்குப் பிறகு, நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூர PAPகட்சி மட்டுமே ஆட்சி செய்து வருகிறது எனட்து நினைவுகூறத்தக்கது. 

மேலும் காண

Source link