Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.

இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் இரண்டு முறை மோதியுள்ளன. இந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளது.

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி பெனோனியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியினை இந்திய ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இது தவிர, ஜியோ சினிமாவில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் முழு போட்டியையும் பார்க்கலாம்.

U19 World Cup finalists in,

2000
2006
2008
2012
2016
2018
2020
2022
𝗔𝗡𝗗 𝟮𝟬𝟮𝟰

This team 👏🇮🇳 pic.twitter.com/1pImcuwiaj

— Lucknow Super Giants (@LucknowIPL) February 6, 2024

பெனோனி பிட்ச் எப்படி..?

போட்டி நடைபெறும் பெனோனி வில்லோமூர் பார்க்கில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சாதகமாக இருக்கும். போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பவுன்ஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணி எட்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை விளையாடிய போட்டி விவரங்கள்:

மொத்த ஒருநாள் போட்டிகள்: 27

முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 8

இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 17

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 233

சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 279

அதிகபட்ச ஸ்கோர்: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 399/6

துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை துரத்தியது.

குறைந்தபட்ச ஸ்கோர்: நெதர்லாந்து எதிரான போட்டியில் பெர்முடா அணி 91 ரன்களுக்குள் சுருண்டது.

இரு அணிகளின் விவரம்:

இந்தியா:

உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர் ), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

ஆஸ்திரேலியா:

ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), லாச்லான் ஐட்கென், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் காம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், எய்டன் ஓ’கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட்லர், ஒல்லி பீக்.

Source link