7 Am Headlines today 2024 april 16th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

மக்களவை தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது – அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை
முரண்பாடுகளின் மொத்த உருவமாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம்
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குகள் பதிவு 
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய தலைவருமான இந்திரகுமாரி மறைவு – முதலமைச்சர் இரங்கல்
டிவி முன் தோன்றியதும் மக்கள் அலறியதும் தான் பிரதமர் மோடியின் சாதனை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் 
குட்கா முறைகேடு வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் 
தொண்டர்களின் உழைப்பை பார்த்து கண்ணீர் வருகிறது – எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி 
பாஜக தேர்தல் பரப்புரையை திமுக தடுப்பதாக திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கோடை வெயில் காரணமாக நாளை கூடுதலாக ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு 
தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் – ஏப்ரல் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் – மதுரை மாவட்டத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு 
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சத்ய பிரதா சாஹூ எச்சரிக்கை 
ஜிஎஸ்டி வரி அல்ல.. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் 
நீலகிரியில் பரப்புரை மேற்கொள்ள வந்த ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் திடீரென சோதனையிட்ட பறக்கும் படையினர்

இந்தியா: 

 மக்களின் உரிமைகளை பறிக்க பாஜக திட்டமிடுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு 
ஈரானில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் தகவல்
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது – பக்தர்கள் ஆர்வம் 
அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டிப்பு
தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ரூ.4,650 கோடி பறிமுதல் – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் 

உலகம்: 

சிங்கப்பூர் அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார் லீ சியோன் – புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் தேர்வு 
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் மழையால் வெள்ளம் – 33 பேர் உயிரிழப்பு 
பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம் – மக்கள் அச்சம் 
இஸ்ரேலில் உள்ள 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதால் பதற்றம் 

விளையாட்டு: 

ஐபிஎல் தொடர்: பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி 
ஐபிஎல் வரலாற்றில் அதிகப்பட்ச ரன்னை (287 ரன்கள்) பதிவு செய்து ஹைதராபாத் அணி சாதனை 
ஐபிஎல் தொடர்: இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதல் 

Published at : 16 Apr 2024 06:52 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link