Lustful grandfathers who molested 14 year old granddaughter Police arrested in pocso act | 14 வயது பேதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம தாத்தாகள்


பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழுப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை அடுத்த ஒருகிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி இந்த சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பே உடல்நிலை சரியாமல் உரிழந்துள்ளார். இதனால் சிறுமி தாயின் அறைவனப்பில் வளர்ந்து வந்துள்ளார். குடும்பத்தின் வறுமையால் சிறுமியின் தாய் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் தந்தையின் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழுப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அலுவலர் பெண் குழந்தைகளுக்கு  குறித்தும் நம்மிடம் பழகும் ஆண் நபர்கள் எந்த என்னதில் பழகுகிறார்கள் என்று குறித்து  “பேட் டச்” “குட் டச்” குறித்து தெரிவித்துள்ளனர். 

பாலியல் சீண்டல் 
அந்த கூடத்தில் இருந்த பெண்குழந்தைகளிடம் உங்களிடம் யாராவது பேட் டச் செய்தல் தாயிடம் சொல்ல வேண்டும், இல்லை என்றல் நாங்கள்  அளிக்கும் புகார் எண்ணிறகு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி விழிப்புணர்வு கூறிக்கொண்டு இருந்தார். அப்போது கூடத்தில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் அதிகாரிகளிடம் சென்று என்னுடைய தாத்தா பள்ளிகள் விடுமுறை நாட்களில் வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதே போன்று 14 வயது சிறுமியின் சின்ன தாத்தா வீட்டிற்கு சிறுமி விடுமுறை நாட்களில் சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம்  சின்ன தாத்தா  பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதக சிறுமி அதிகாரிகளிடம் இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள்  அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

போக்சோ சட்டத்தில் தாத்தாக்கள் கைது 
அதில் சிறுமியின் இரண்டு தாத்தாக்களும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தாத்தா  முனுசாமி வயது (62) சின்ன தாத்தா குமரேசன் வயது (60) ஆகிய இரண்டு நபர்கள் மீதும்  திருவண்ணாமலை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் , அவர்களை கைது செய்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் காண

Source link