suryakumar yadav ruled out mumbai indians IPL 2024


ஐ.பி.எல் 2024:
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அந்த அணியில் பல்வேறு குழுப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. கடந்த முறை தன் தலைமையிலான குஜராத் அணியை இறுதி போட்டி வரை ஹர்திக் பாண்டியா அழைத்து வந்தார். அதேபோல் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு ஐ.பி.எல் கோப்பையையும் அவர் பெற்று கொடுத்தார். 
இந்நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் சீசன் 17-ல் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு எடுத்தது. அதேபோல் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததை ரசிகர்கள் விரும்பவில்லை.  
அதேநேரம், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்க பட்டதற்கு ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் வாழ்த்து கூட சொல்லவில்லை. இதன்மூலம், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில், ரோகித், பும்ரா, சூர்யகுமார் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.
விலகும் சூர்யகுமார் யாதவ்?

இதனிடையே சூர்யகுமாருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இச்சூழலில் ஐபிஎல் 17ஆவது சீசனுக்குள் அவர் தயாராகிவிடுவார் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் இன்னமும் ஒரு மாத காலம் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமி மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கும் எமோஜியை பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆரம்ப போட்டிகளில் இருந்து அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
ரோகித் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெபர்ட் ஹர்திக் பாண்டியா (கேப்டன்) ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஷ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா. 
 

மேலும் காண

Source link