Tamil Nadu latest headlines news April 1st 2024 flash news details know here



CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?” – பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். மேலும் படிக்க

மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி; மேடையிலேயே செஞ்சி மஸ்தானுடன் வாக்குவாதம் – நடந்தது என்ன?

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் படிக்க

TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – என்ன நிலவரம்?

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் – காரணம் என்ன?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் படிக்க

Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணை- இன்றைய நீர் நிலவரம்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க
 

Katchatheevu Row: ”எல்லாம் அவர்களுக்கு தெரிந்தே தாரை வார்க்கப்பட்டுள்ளது” – கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்..

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

மேலும் காண

Source link