கள்ளக்குறிச்சி சம்பவத்தை விசாரிக்க குஷ்பு தலைமையில் குழு… அதிரடி உத்தரவு…

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் பெண்கள் உயிரிழந்த‍து தொடர்பாக விசாரணை நடத்த, குஷ்பு தலைமையில் குழு அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்பதால், விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. ஆண்கள் மட்டுமே சாராயம் குடிக்கும் நிலையில், பெண்களும் சாராயம் குடித்த‍தால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கணவன் மனைவி சேர்ந்து குடித்து உயிரிழந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 6 பெண்கள் விஷச்சாராயத்தால் உயிரிழந்திருப்பதை, செய்திகள் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த மூவர் குழுவையும் அமைத்துள்ளது.

அதன்படி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்த‍து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/NCWIndia/status/1805584712045674761

குஷ்பு பாஜக நிர்வாகியாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் விசாரணைக் குழு தலைவியாக வருவதால், நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், விஷச் சாராய கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.