“திமுகவின் ஏடிஎம் எ.வ.வேலு” – திருவண்ணாமலையில் அண்ணாமலை காரசார விமர்சனம்

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். குறிப்பாக நேற்று இரவு 8 மணி அளவில் திருவண்ணாமலையில் நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் முடிந்து திருவண்ணாமலை காந்தி சிலையின் முன்பாக பொதுமக்களிடையே உரையாற்றினார்.

திருப்புமுனை தேர்தல்

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் என்பது இந்தியாவிற்கு திருப்புமுனை தேர்தல் ஆகும். தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக அமர்வதற்கான தேர்தல். பத்தாண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை மோடி அளித்து வருகிறார். இந்தியாவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தை இரட்டிப்பு செய்துள்ளார்.

அடாவடி அரசியல்

ராமர் கோயில் அமைந்ததால் இழந்த பாரம்பரியத்தை சனாதனத்தை இந்தியா திரும்பவும் மீட்டெடுத்துக் கொண்டு வந்துள்ளது. மோடியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு இந்தியாவின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வந்துள்ளது. தற்பொழுது இந்தியா முதன்மை நாடாக பொருளாதாரத்தில் வரும் என்ற நம்பிக்கை இளைஞர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. கடந்த கால காங்கிரஸின் பத்தாண்டு கால ஆட்சி என்பது ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜாதி அரசியல், ஊழல் அரசியல், குடும்ப அரசியல், அடாவடி அரசியல் என நான்கு அரசியல் தான் தமிழகத்தின் நாற்காலியாக உள்ளது. இதைப் பிடித்து இழுத்து எறிய வேண்டும் என்று பாரதிய ஜனதா முயன்று வருகிறது.

குறிப்பாக அண்ணாமலையார் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரை தாக்கியது திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர். காவல்துறை பெண் ஆய்வாளருக்கு நியாயம் கொடுக்க முடியவில்லை என்றால் எதற்காக திமுக ஆட்சியில் உள்ளது. மூன்று முறை மாவட்ட நீதிமன்றம் ஸ்ரீதருக்கு மூன்று முறை ஜாமின் தர மறுத்த நிலையில் இன்று வரை அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக உள்ள முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரை இதுவரை கைது செய்யாமல் அவர் மீது நடவடிக்கை எதுவும் காவல்துறை எடுக்கவில்லை என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

பாம்புக்கு பல்லைப்பிடிங்கிய நிலை

பாம்புக்கு பல்லைப்பிடிங்கிய நிலையில் தற்போது தமிழக காவல்துறை உள்ளது என்றும் சாமானிய மனிதனின் நேர்மையை இந்த திமுக அரசு மதிக்கவில்லை, என்றும் இந்த சூழ்நிலையில் எப்படி பொதுமக்கள் காவல்துறையை நாடுவார்கள் என குற்றம் சாட்டிய அண்ணாமலை அவர்கள், திருவண்ணாமலையில் கோபுரத்தை மறைத்து வணிகவளாக மட்டும் முயற்சியை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து நள்ளிரவு வரை காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். ஆனால் உங்களுடைய பெண் காவல் ஆய்வாளரை அவமானம் செய்த திமுக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரை ஏன் இதுவரை காவல் துறையினரின் கைது செய்யவில்லை என விமர்சனம் செய்தார்.

கைரேகை தேய்ந்து விட்டது

தகுதியே இல்லாமல் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் ஆட்சியில் அமர்கிறார்கள், மேலும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு வேட்பாளரான உங்களது கையில் கைரேகை தேய்ந்து விட்டது. இதுவரை நீங்கள் செய்த வரலாற்று பிழையை மாற்றி வருகின்ற தேர்தலில் மோடிக்கு வாக்களியுங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

மேலும் எங்களால் ஆன்மீக தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களின் வருமானத்தைக் கொண்டு திருக்கோவில்களுக்கு எதையும் செய்யாமல் காவி வேட்டி கட்டிக்கொண்டு, நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு இந்து மக்களை ஏமாற்றி வருகிறார் எனவும்,இந்து மக்களுக்கு எதிராக ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது

திமுகவின் ATM

குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் ஏடிஎம் ஆக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளார் என்றும், குற்றம் சாட்டிய அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி கட்டிடங்களைத் திறக்க இரண்டு முறை வந்த முதலமைச்சர், மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ. வேலு பணம் சம்பாதிக்க, திமுக கூட்டங்களுக்கு செலவு செய்ய, தேர்தலின் போது மக்களுக்கு காசு கொடுக்க, புதிதாக ஒரு மருத்துவ கல்லூரியை திறந்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகிறது.

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த மருத்துவ கல்லூரிகளுக்கு ரிப்பன் வெட்டியதைத் தவிர, புதியதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரியைக் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவின் ATM எ.வ. வேலு. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அவரது குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு மொத்தம் 5,442.39 கோடி ரூபாய். வாக்களித்த மக்களுக்கோ இத்தனை ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை.

ஏடிஎம் வேலு

ஏடிஎம் வேலு வைத்துள்ள, இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களையும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் இருவருக்கும் அறிவுத்திறன் போட்டி வைத்துக் கொள்ளலாம். அதில் உங்கள் பள்ளி மாணவன் தேர்வு பெற்றால் நான் அரசியலில் இருந்து விலகி விடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்டார். தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இனி சிலை வைத்துக்கொண்டு தான் அரசியல் செய்கின்றனர் அரசியலில் இருக்கின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாங்கள் 100 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம் பௌர்ணமி போன்ற நாட்களில் கூட்ட நெரிசல் இல்லாமலும் வணிக வளாகங்கள் மூடாமலும் அதற்கான தீர்வுகளை நாங்கள் காண்கிறோம். மேலும் திமுக பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது, ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரிங்கள் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

Source link