"சூதாட்டத்தை ஊக்குவிக்காதீங்க" பிரபலங்களுக்கு ஆர்டர் போட்ட மத்திய அரசு!

ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டம், நாடு முழுவதும் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதை தடை செய்யும் வகையிலும் ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் பல்வேறு மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளன.

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்:

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அந்த வகையில், சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கும் விதமாக விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக விளம்பரங்களை வெளியிடக் கூடாது என விளம்பரதாரர்கள், வெளியிட்டாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளருமான ரோகித் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மூலம் சூதாட்ட இயங்குதளங்கள் சூதாட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. இதை, மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது.

பிரபலங்களுக்கு ஆர்டர் போட்ட மத்திய அரசு:

இம்மாதிரியான விளம்பரங்களில் அவர்கள் நடிப்பதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்ற எண்ணத்தை மத்திய அரசு அளிக்கிறது. 2022 ஆம் ஆண்டில், மத்திய நுகர்வோர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தவறான விளம்பரங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து வருகின்றன.

இடையில் சில காலம் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் நிகழாமல் இருந்தது. ஆனால், சமீப காலமாக, தற்கொலைகள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. மாம்பட்டி கண்ணனின் தற்கொலை கடந்த இரு மாதங்களில் நிகழ்ந்த மூன்றாவது தற்கொலை ஆகும். கடந்த ஜனவரி 4ஆம் நாள் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரைத் தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதி, சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார்.

இதையும் படிக்க: Watch Video: குட்டியானையின் சுட்டித்தனம்.. வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..

Source link