தமிழ்நாடு:

தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி; உண்மைக்கு புறம்பாக இருந்ததாக குற்றச்சாட்டு
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம்; கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா..? அமைச்சர் சிவசங்கர் சவால்
குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி – விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக உள்ளன, என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

இந்தியா: 

பீகாரில் அந்த மாநில சபாநாயகருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 
பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் டெல்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை கும்பலாக சேருவதற்கு தடை விதிக்கும் விதமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது எந்தெந்த நாடுகளில் செயல்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முள்வேலி அமைத்து தடுக்க போலீஸ் முயற்சி; டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி – விவசாய சங்க முக்கிய தலைவர்கள் கைது
கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் 8 கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

உலகம்: 

பிரதமர் மோடி இன்று அமீரகத்திற்கு பயணம்: அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.
புதிய நாடாளுமன்றத்தில் இரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என இம்ரான் கட்சி அறிவித்துள்ளது.
பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல் – 50 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
அமெரிக்காவின் உள்ள சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம்.

விளையாட்டு: 

சென்னையில் நடைபெற்ற ரஞ்சிக் கிரிக்கெட்டில் தமிழ்நாடு கர்நாடகா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இந்தியா அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவருமான செளரப் திவாரி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.

Published at : 13 Feb 2024 07:05 AM (IST)

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports