தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படடு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா:

சென்னை மாநகரில் தீவுத்திடல் கொளத்தூர் – மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் – முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் – ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி – பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் – நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம்,

கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – பழனியப்பா நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா வரும் 17ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்:

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த விழாவில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் வேலு, பரந்தாமன், தமிழரசி, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
odds atletik i dag Have a look at my web page tennis Tips
juegos de jugar gratis ruleta casino sin descargar ni Registrarse sin descarga
consigli scommesse oggi my homepage – quote vincente campionato italiano – Mariano,
Regole dadi del gioco dei dadi
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறீர்கள்" – விஜய்யை விமர்சிக்கும் சிபிஎம் பாலகிருஷ்ணன்; பின்னணி என்ன? | ACTPnews.com

“ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்” – பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு | “Hunger strike to urge Tn government to build dam at Rasimanal” – P.R. Pandian announces. | ACTPnews.com

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்! | ACTPnews.com

“எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியா கூட்டணில்.!”- மாணிக்கம் தாகூர் கூறியதென்ன? | tn congress leader manickam tagore about tvk in india alliance | ACTPnews.com

”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” – உதயநிதி | “Is this a government or a circus troupe? That is the level of this government’s performance.” – Udhayanidhi | ACTPnews.com

gambling illegal usa, poker site usa and free bingo odds of winning – Katrice, games united states, or online gambling…