2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது (Photo Credits : PTI)இந்த போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். (Photo Credits : PTI)பத்து அணிகள் மோதும் இந்த போட்டியில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். (Photo Credits : PTI)அந்தவகையில் 2024 ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. (Photo Credits : PTI)இப்போட்டிக்கான முன்பதிவு இன்று காலையில் தொடங்கிய நிலையில், ஒரு சில நிமிடங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. அதனால், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். (Photo Credits : PTI)பெண்களுக்கான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸிற்கு எதிராக களம் கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. (Photo Credits : PTI)
Published at : 18 Mar 2024 12:05 PM (IST)
ஐபிஎல் ஃபோட்டோ கேலரி
மேலும் காண