Tamil Nadu latest headlines news till afternoon 23rd march 2024 flash news details here



Lok Sabha Elections 2024: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி பரபரப்பு பேட்டி!

2024ஆம் ஆண்டு நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க

Lok Sabha Election: எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன் – கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களவை தேர்தல் பரப்புரையில் நேரடியாக ஈடுபட உள்ளேன். எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே எனக்கு சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. மேலும் படிக்க

Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்” – அமைச்சர் உதயநிதி விமர்சனம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு 28 பைசாவை மட்டுமே திருப்பி வழங்குகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகம் நிதி பகிரப்படுகிறது. ​​பிரதமர் நரேந்திர மோடியை இனி 28 பைசா பிரதமர் என்றுதான் அழைக்க வேண்டும். அதே போல் நிதி உரிமை. மேலும் படிக்க

Minister Ponmudi: “தமிழக ஆளுநருக்கு என் மேல பாசம் ரொம்ப அதிகம்” அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, கொளதமசிகாமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட் – டாக்டர் டூ விவசாயி

 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மீண்டும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என மொத்தம் 40 வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். மேலும் படிக்க

மேலும் காண

Source link