Varalaxmi Sarthkumar engaged to Mumbai Art gallarist clicks goes viral on grounds


தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் (Varalaxmi Sarthkumar) தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 2012ஆம் ஆண்டு அறிமுக இயக்குநராக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் தனது அசாத்தியமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 
 

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் குறித்த பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் மார்ச் 1ஆம் தேதி மும்பையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.     
 

வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் ஒரு Gallerist. கேலரி 7 என்ற பெயரில் கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. இவருக்கும் வரலட்சுமிக்கும் 14 ஆண்டுகால நட்பு உள்ளது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 
சமீபத்தில் கூட தெலுங்கில் வெளியான ‘ஹனுமேன்’ படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ரயான்’ படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்கள். இது தவிர வேறு சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். 

மேலும் காண

Source link