Pro Kabaddi 2023 Tamil Thalaivas Won The Match Against Bengaluru Bulls Today PKL 2023

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது.
 
இச்சூழலில் தான் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 17 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. அதாவது தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் அணி 28 புள்ளிகளையும் எடுத்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்களூரு புல்ஸ் அணி 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
அதாவது தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகளும் பெங்களூரு புல்ஸ் அணி 38 புள்ளிகளையும் எடுத்து இருந்தது. இந்நிலையில் தான் தங்களை தோற்கடித்த பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி பழிக்கப்பழி தீர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் பழிக்குப் பழி தீர்த்திருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இதனால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு அணியை பொறுத்தவரை அக்சித் தூல் 10 ரெய்டுகள் சென்று 2 போனஸ் உட்பட 12 புள்ளிகளை அந்த அணிக்கு பெற்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை நரேந்தர் 9 ரெய்டுகள் சென்று 1 டேக்கல் 4 போனஸ் உட்பட மொத்தம் 14 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். அதேபோல், 11 ரெய்டுகள் சென்ற அஜிங்யா பவர் 11 புள்ளிகளை எடுத்தார்.
தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ்:
நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 ல் வெற்றி, 9 ல் தோல்வி என 25 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இதேபோல், 37 புள்ளிகளுடன் பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது பெங்களூரு புல்ஸ்.
 
தமிழ் தலைவாஸ்:
Raid points: 25
Super raids : 0
Tackle points: 15
All out points: 4
Extra points: 1
 பெங்களூரு புல்ஸ்:
Raid points: 22
Super raids : 1
Tackle points: 3
All out points: 2
Extra points: 1
 
மேலும் படிக்க: EXCLUSIVE: கபடி வீரர்களில் நிறைய பேர் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்… தமிழ் தலைவாஸ் வீரர்கள் சொன்ன விஷயம்..
 
மேலும் படிக்க: IND vs SA 1st Test: ரஹானே இருந்திருந்தால்…உண்மையை போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்…என்ன சொன்னார் தெரியுமா?
 
 

Source link