இந்திய கிரிக்கெட் அணி வீரர் க்ருணால் பாண்டியாவிற்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
க்ருணால் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தது:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர் க்ருணால் பாண்டியா. கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற க்ருணால் பாண்டியா 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இதில் 130 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேபோல், 174 டி20 போட்டிகளில் விளையாடி 2253 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இவருக்கான வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று ஐ.பி.எல் சீசன் 17ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
குழந்தையை கொஞ்சும் பாண்டியா தம்பதி:
Vayu Krunal Pandya 21.04.24 💙🪬 🌍 pic.twitter.com/TTLb0AjOVm
— Krunal Pandya (@krunalpandya24) April 26, 2024
இந்நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மாடலான பன்குரி சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த குழத்தைக்கு கவிர் க்ருணால் பாண்டியா என்ற பெயரை சூட்டினர் இந்த தம்பதி. இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 2ஆவது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இந்த குழந்தைக்கு வாயு க்ருணல் பாண்டியா என்று பெயர் சூட்டி உள்ளனர் க்ருணால் மற்றும் பன்குரி தம்பதி.
Congratulations krunal ❤
— Atharv𝕏Shukla (@Atharb_) April 26, 2024
இது தொடர்பான தகவலை க்ருணால் பாண்டியா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 5 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jasprit Bumrah: ”எனது பயணத்தில் இணையுங்கள்” – ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பும்ரா!
மேலும் படிக்க:T20 World Cup: டி20 உலகக் கோப்பை நாயகன்.. யுவராஜ் சிங்கை கவுரவித்த ஐசிசி!
மேலும் காண