Good Bad Ugly: அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குட் பேட் அக்லி படம்:

திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளதே பல விமர்சனங்களை கிளப்பிய நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படத்துக்கு ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

3 வேடங்களில் நடிக்கும் அஜித்?

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், என்னென்ன கதாபாத்திரங்களில் அஜித் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.

கடைசியாக, 2006ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘வரலாறு’ படத்தில் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் அபாரமான தத்ரூபமான நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இன்று வரை அஜித்தின் கேரியரில் டாப் 5 படங்களில் ஒன்றாக வரலாறு இருக்கிறது.

அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பில் அந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் அஜித். எனவே, 16 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மீண்டும் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இறுதி கட்டத்தில் விடாமுயற்சி:

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில், த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து முன்னதாக படக்குழு சென்னை திரும்பியது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தை ஏப்ரல் அல்லது மே மாதங்த்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு வீச்சில் வேலை செய்து வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க

Shruti Hassan: தெலுங்கு சினிமாவுக்கு வாழ்க்கை முழுதும் நன்றியுடன் இருப்பேன்.. ஷ்ருதி ஹாசன் உருக்கம்!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
nexus darknet market link https://darknetmarketworld.com/
apuestas deportivas mejores app – Kristina – deportivas online
What we recommend now https://www.futurotarot.gratis
casas de Apuestas Corners deportivas comparativa
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு – விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? | ACTPnews.com

“மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!”- திமுக தலைவர் ஸ்டாலின் | dmk stalin about changes in party | ACTPnews.com

“என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!”- வன்னி அரசுக்கு உதயநிதி பதில்| udhayanidhi stalin answer to vanni arasu in tn assembly | ACTPnews.com

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' – கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்! | ACTPnews.com

நேபாள வெள்ளம்: தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை – வெங்கட் நாராயணா! | Nepal Floods: TN Special Rep Venkatnarayana Update on Rescue Ops | ACTPnews.com

paginas de apuestas tarjeta Roja online